நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரன்களை வாரி வழங்கிய கேகேஆர் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தியின் மர்ம சுழல் பந்துவீச்சு காலம் முடிந்து விட்டதாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறி இருக்கிறார்.
இந்த போட்டியில் நான்கு ஓவர்கள் பந்து வீசிய வருண் சக்கரவர்த்தி ஓவருக்கு 12 ரன்கள் வீதம் கொடுத்து மொத்தம் 48 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மேலும் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. டி20 உலகக்கோப்பை தொடரிலும் அவருடைய பந்துவீச்சை வெளுத்து கட்டி விட்டார்கள்.
இதுகுறித்து பேசிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “வருண் சக்கரவர்த்தியின் மிஸ்டரி பந்துவீச்சு இப்போது ஹிஸ்டரியாக மாறிவிட்டது. அவர் லெக் ஸ்பின் வீச கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவரால் இங்கு தாக்குப் பிடிக்க முடியாது. அவர் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்தை வெளியில் திருப்ப வேண்டும்”
“அவர் தொடர்ந்து பந்தை உள்ளே கொண்டு வர கூக்ளியை மட்டுமே வீசிக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சை புரிந்து கொண்டார்கள். எனவே தற்போது அடித்த நொறுக்குகிறார்கள். இதற்கு அவர் உடனடியாக மாறிக்கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

