இன்று லக்னோ அணிக்கு எதிராக ஏகனா மைதானத்தில் சிஎஸ்கே விளையாட இருக்கும் போட்டியில் கார்த்திக் சர்மா நான்காவது இடத்தில் விளையாட கூடாது என ஸ்ரீகாந்த் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
அப்போது சிஎஸ்கே அணிக்காக நான்காவது இடத்தில் இளம் வீரர் கார்த்திக் சர்மா விளையாடி வருகிறார் ஆனால் அவருக்கு வேகப்பந்து வீச்சுக்கு சந்தித்து விளையாடுவதில் பிரச்சனை இருக்கிறது லக்னோ மைதானம் வேத பந்துவீச்சு சாதகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது “இன்று லக்னோ மைதானம் நிச்சயம் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமாகவே இருக்கும். கார்த்திக் சர்மாவுக்கு வேகப் பந்து வீச்சு சந்தித்து விளையாடுவதில் பெரிய பிரச்சனை இருக்கிறது. எனவே அவர் நான்காவது இடத்தில் விளையாடவே கூடாது. அந்த இடத்தில் பிரிவிஸ் விளையாட வேண்டும்”
“இப்போது ஓவர்டன் இல்லாததால் ஜான்சன் வரவேண்டும். இல்லையென்றால் குல்ஜப் விளையாடலாம் இருந்தாலும் ஜான்சன்தான் சரியான பவுலராக இருப்பார். மேலும் லக்னோ முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும்” என்று கூறியிருக்கிறார்.

