நேற்று லக்னோ அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த கார்த்திக் சர்மா பேட்டிங் குறித்து ஸ்ரீகாந்த் பாராட்டி பேசி இருக்கிறார்.
இந்த போட்டிக்கு முன்பாக கார்த்திக் சர்மாவை ஆடக்கூடாது என ஸ்ரீகாந்த் கடுமையாக கூறியிருந்தார். வேகப் பந்துவீச்சுக்கு எதிராக அவர் சரியாக விளையாடுவதில்லை என்பதால் அவரை விளையாட வைக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தார்.
இது குறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது “உண்மையில் கார்த்திக் சர்மா இப்படி விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நேர்மையாக இந்த போட்டியில் அவரை விளையாட வைக்க கூடாது என்று நான் நினைத்தேன். ஆனால் என் முடிவை நான் வாபஸ் பெறும் வகையில் அவர் விளையாடியிருக்கிறார்”
“அதே சமயத்தில் ஒரு சிக்ஸர் இல்லை பவுண்டரி அடித்தால் அவர் அதற்கு அடுத்து நிறைய டாட் பந்துகள் விளையாடுகிறார். அவர் உடனடியாக ஒரு சிங்கிள் எடுக்க வேண்டும். நேற்று அப்படி செய்து பிரிவிஸ் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

