நான் சொல்றதை கேளுங்க.. சூரியகுமார் நீ வெஸ்ட் இண்டீஸ் கூட இதை செஞ்சா வெளியே போய்டுவோம் – ஸ்ரீகாந்த் எச்சரிக்கை

நேற்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சின் துல்லியம் கொஞ்சம் குறைவாக இருந்தது. வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சிலும் ரன்கள் சென்றது. அதே சமயத்தில் ஆறாவது பவுலர் சிவம் துபே இரண்டு ஓவர்கள் மட்டுமே பந்து வீசி மொத்தம் 46 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இந்த வகையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டு ஓவர்கள் பந்து வீசி அதிக ரன் விட்டுக்கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.

- Advertisement -

தற்போது திடீரென இந்திய அணியில் பௌலிங் யூனிட் பலவீனமாக மாறுகிறது. வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை எதிர் அணிகள் கண்டுபிடித்து விட்டார்கள். அவர் ஒரு ஓவரின் ஒவ்வொரு பந்தையும் எப்படி வீசுவார் என்று கணித்து வைத்திருக்கிறார்கள். மேலும் பந்து அவர் கையில் இருந்து புறப்படும் போது அதை சரியாக எந்த மாதிரியான பந்து எனவும் கண்டுபிடிக்க ஆரம்பித்து இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை உருவாக்கியுள்ளது.

- Advertisement -

இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “இப்போதைக்கு எனக்கு இந்திய அணியின் பவுலிங் யூனிட் குறித்து கவலை இல்லை. ஏனென்றால் சென்னை ஆடுகளம் பேட்டிங் செய்ய மிக சாதகமாக இருந்தது. அதே சமயத்தில் இந்திய அணியின் ஆறாவது பவுலர் யார் என்பது எனக்கு கவலையாக உள்ளது. சிவம் துபே ஆடுகளத்தை விட்டு வெளியில் பந்து வீசிக் கொண்டிருக்கிறார். அடுத்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் உடன் நாம் ஆறாவது பவுலரை பயன்படுத்தவே கூடாது. கேப்டன் சூரியகுமார் யாதவ் தேவைப்பட்டால் அரை இறுதியில் இதை செய்து பார்த்து கொள்ளலாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles