காவ்யா டீமை கடவுள்தான் காப்பாத்தணும்.. இவங்க தான் முக்கிய ஆளுனா நீங்க இப்பவே காலி – ஸ்ரீகாந்த் அதிரடி

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும், அவர்கள் 400 ரன்கள் அடித்தாலும் வெற்றி பெற முடியாது என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பவுலிங் யூனிட் மற்ற அணிகளின் பவுலிங் யூனிட்டை விட மிகவும் பலவீனமானதாக காணப்படுகிறது.

- Advertisement -

இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “உங்கள் அணியில் ஹர்ஷல் படேல் மற்றும் உனன்கட் இருவரும் தான் முக்கிய பவுலர்கள் என்றால் உங்கள் அணியை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். இப்படிப்பட்ட ஒரு பவுலிங் யூனிட் வைத்துக் கொண்டு நீங்கள் இன்னும் எத்தனை நாள் சமாளிக்க முடியும்?”

- Advertisement -

“இறுதியில் உங்களுக்கு வலிமையான பவுலிங் யூனிட் தேவை. இந்த பவுலிங் யூனிட்டை வைத்துக் கொண்டு எதுவுமே செய்ய முடியாது. இவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் 300 ரன் அடிப்பார்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் 400 ரன் எடுத்தாலும் கூட இந்த பவுலர்களை வைத்துக் கொண்டு வெல்லவே முடியாது” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles