தோனியை வச்சு ஸ்கேம் பண்றிங்களே அசிங்கமா இல்லையா சிஎஸ்கே?.. அவர் ஆட வேண்டியதில்லை – ஸ்ரீகாந்த் ஆவேசம்

சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனியை வைத்து ஸ்கேம் செய்வதாக ஸ்ரீகாந்த் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே தோனி அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவார் என்கின்ற பொய்யான நம்பிக்கையை ரசிகர்களுக்கு கொடுத்தும், ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாக அவர் உடல் தகுதியுடன் இருப்பது போல வீடியோக்களை வெளியிட்டு ஏமாற்றியதாகவும் ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது ” இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் தோனிக்கு காயம் என்று சொன்னார்கள். பிறகு கேப்டன் பயிற்சியாளரும் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்பது போல சூசகமாக பேசி வந்தார்கள். ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் அவர் உடல் தகுதியுடன் இருப்பது போல காட்ட பேட்டிங் செய்யும் வீடியோக்களை வெளியிட்டார்கள். இப்படி மக்களுக்கு தவறான தகவல்களை கொடுத்து ஏமாற்றினார்கள்”

- Advertisement -

“சிஎஸ்கே ரசிகர்கள் தோனி விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அவருடைய காலம் முடிந்து விட்டது. தோனி சிஎஸ்கே டிரெஸ்ஸிங் ரூமில் இருக்க வேண்டும் என்றுதான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனியை வைத்து ரசிகர்களை ஏமாற்றுகிறது” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles