ருதுராஜ்க்கு கேப்டன்ஷியே தெரியல.. நீ எப்படிப்பா அடுத்த ஜடேஜாவை உருவாக்குவ.. சிஎஸ்கே சிக்கிவிட்டது – ஸ்ரீகாந்த் கருத்து

தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்கும் ருதுராஜுக்கு பவுலர்களை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை என ஸ்ரீகாந்த் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் ஜடேஜாவுக்கு மாற்றாக மினி ஏலத்தில் வாங்கப்பட்ட பிரசாந்த் வீர் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவருக்கு நேற்று ஒரு ஓவர் கூட பந்து வீச வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது “பிரியன்ஸ் ஆர்யா வெறும் 11 பந்தில் 39 ரன்கள் எடுத்தார். அவரது அதிரடி தாக்குதலால் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் கட்டுப்பாட்டை இழந்து விட்டனர். ஆனால் ஒரு கேப்டனாக ருதுராஜ் அந்த நேரத்தில் என்ன செய்வது? என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார்”

- Advertisement -

“முதல் போட்டியில் ஸ்பின் ஆல்ரவுண்டர் மேத்யூ ஷார்ட் ஆட வாய்ப்பு கொடுக்கப்பட்டு ஒரு ஓவர் கூட பந்து வீச வாய்ப்பு தரவில்லை. இதேபோல ஜடேஜாவுக்கு மாற்று என்று சொல்லப்படும் பிரசாந்த் வீர் ஆட வாய்ப்பு கொடுக்கப்பட்டு அவருக்கும் ஒரு ஓவர் கூட வீச வாய்ப்பு கொடுக்கவில்லை. இவர் எப்படி ஜடேஜாவுக்கு மாற்று வீரராக உருவாக முடியும்?” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles