காலி பாத்திரம் தான் கத்திகிட்டே இருக்கும்.. பாகிஸ்தான் போர்டு பயந்துகிட்டு வாக் ஓவர் கொடுத்திருக்கு – ஸ்ரீகாந்த் விமர்சனம்

அடுத்த சில நாட்களில் துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் விளையாடாத என அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மிகவும் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது ஐசிசி அமைப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் இதுவரையில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை என்பதுதான் உண்மை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து இந்த விஷயத்தில் பிடிவாதம் காட்டி வருவதாக முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “எப்போதுமே காலி பாத்திரம்தான் கத்திக்கொண்டே இருக்கும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய அணிக்கு எதிராக விளையாடினால் தோற்றுவிடுவோம் என்று பயந்து கொண்டு இருக்கிறது. இப்போது நடைபெற்ற அண்டர் 19 உலககோப்பை தொடரில் கூட இந்திய அணி இடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இதன் காரணமாகவே அவர்கள் வாக் ஓவர் கொடுக்க நினைக்கிறார்கள். நான் ஆசியக் கோப்பை தொடரில் பார்த்தேன். அவர்கள் எல்லா போட்டிகளிலும் இந்திய அணிக்கு எதிராக விளையாடினார்கள். ஆனால் தோல்வி தான் அடைந்தார்கள். எனவே தான் அவர்கள் இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்து இருக்கிறார்கள்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles