நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்தது பெரிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அதிரடியாக திலக் வர்மாவை இந்திய பிளேயிங் லெவனில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
திலக் வர்மா மிகவும் மெதுவாக விளையாடி வருவது ஏற்கனவே விமர்சனம் ஆகி வருகிறது. இந்த நிலையில் தென்னாபிரிக்கா இன்னைக்கு எதிராக அவர் ஆட்டம் இழந்த முறை ரசிகர்களை வெறுப்படைய வைத்திருக்கிறது.
இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “திலக் வருமா அப்படி ஒரு ஷாட் விளையாடிய காரணத்திற்காகவே அவர் கிரீஸில் இருப்பதற்கான தகுதியே இல்லாதவர். உடனடியாக அவரை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை கொண்டு வந்து நாம் விளையாட வேண்டும்”
“இந்திய அணி பெரிய ரன்களை துரத்திய போதெல்லாம் அதில் ஆட்டநாயகனாக விராட் கோலி இருந்திருக்கிறார். அவர் இல்லாத குறை இப்பொழுது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்து விட்டது. இனி அணிகள் எல்லாம் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்து இந்திய அணியை இலக்கை துரத்த வைக்கும்” என்று கூறியிருக்கிறார்.

