இந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ரபாடா மற்றும் சிராஜ் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அபிஷேக் மற்றும் ஹெட் இருவரும் மிக மோசமான முறையில் பரிதாபமாக ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது “இந்த அபிஷேக் பையன் முதல் பந்திலேயே சிக்சர் அடித்தார். ஆனால் மீண்டும் ஏன் அப்படியே அடிக்க செல்கிறார். மீண்டும் மீண்டும் மோசமாக முயற்சி செய்து அந்த ஓவரின் நான்காவது பந்தில் ரபடாவிடம் காலி ஆகிவிட்டார். நீங்கள் ஆரஞ்சு தொப்பி வாங்குவதை விட அர்ப்பணிப்புடன் விளையாட வேண்டும்”
“மேலும் ஹெட் இந்த சீசனில் முழுத்த அதிர்ஷ்டத்தால் மட்டுமே ரன் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் மிகவும் தடுமாற்றத்தோடு விளையாடிக் கொண்டிருக்கிறார். உண்மையில் அவர் எடுக்கும் ரன்கள் அதிர்ஷ்டத்தால் மட்டும் தான் வந்து கொண்டிருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

