பதிரானாவுக்கு அடித்த ஜாக்பாட்.. எல்லாம் சிஎஸ்கேவின் மகிமை.. எல்பிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன பத்திரானா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியுடன் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றில் இருந்து பரிதாபமாக வெளியேறியது. லீக் சுற்றின் தொடக்கத்தில் சென்னை அணிக்காக சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருந்த பத்திரானா தொடரின் பாதியில் காயம் காரணமாக சிஎஸ்கேவை விட்டு வெளியேறினார்.

- Advertisement -

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கி வருவதால் அவரது உடல் நலனை கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் வாரியம் அவரை அழைத்துள்ளது. டி20 உலக கோப்பைக்காக இலங்கை அணி மிக தீவிரமாக தயாராகி வருகிறது. அதில் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக பத்திரானா இருப்பார் என்று தெரிகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதைப் போன்று இலங்கையில் இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த எல்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை பத்திரானா பெற்றுள்ளார்.

- Advertisement -

இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏற்கனவே சிறப்பாக விளையாடி வரும் நிலையில் இன்று நடைபெற்ற ஏலத்தில் இவர் மீதான ஏலத் தொகை அதிகரித்தது. இவரின் அடிப்படை விலை 50 டாலர்கள் என்று நிர்ணயித்த நிலையில் ஏலம் செல்லச் செல்ல இவரது அடிப்படை விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்தது.

50 டாலர்களில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இவரது ஏலம் இறுதியாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் டாலருக்கு கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி இவரை வாங்கியது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் டாலர்கள் என்றால் இந்திய மதிப்பில் 99 லட்சத்து 96 ஆயிரத்து 99 ரூபாய் ஆகும். மேலும் இந்த எல்பிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை பத்திரானா படைத்துள்ளார்.

- Advertisement -

2022ஆம் ஆண்டு சென்னை அணிக்காக முதலில் சில போட்டிகளை மட்டும் பத்திரானா விளையாடினார். அப்போதே அவரின் திறமையை கண்டறிந்த மகேந்திர சிங் தோனி 2023ஆம் ஆண்டு அவரை நிரந்தரமாக சென்னை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக உருவாக்கினார். இக்கட்டான சூழ்நிலைகளில் மகேந்திர சிங் தோனி பந்தை கொடுக்கும் போதெல்லாம் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கியமாக உதவுவார்.

இதையும் படிங்க:விராட் கோலியுடன் பேசியதற்கு பிறகு இந்த மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.. ஆனால் எதுவுமே மாறவில்லை.. அஸ்வின் சேனலுக்கு பேட்டி அளித்த கம்பீர்

இவரின் ஒத்துழைப்பின் காரணமாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த சீசனில் சென்னை அணிக்கு முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில், லீக் சுற்றோடு சென்னை அணி வெளியேறியது. அடுத்து நடைபெற இருக்கும் மெகா ஆக்சனில் சென்னை அணி இவரை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles