இந்திய அணியின் முதன்மையான வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்துவரும் பும்ரா சமீபத்தில் இந்திய அணியின் டி20 உலக கோப்பை வென்ற போது அதில் முக்கிய பங்காற்றினார்.
இந்த நிலையில் பும்ராவைப் பார்த்து பயப்பட வேண்டாம் எனவும், அவருக்கும் சில சமயங்களில் இந்த சிக்கல் இருக்கும் என்றும் இலங்கை அணியின் தற்போதைய பயிற்சியாளர் ஜெயசூர்யா அவர் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
தற்போதைய நவீன கிரிக்கெட்டின் நம்பர் ஒன் வேகபந்துவீச்சாளராக திகழும் இந்தியாவைச் சேர்ந்த பும்ரா இந்திய அணி தோல்வி பாதையில் இருந்தால் கூட தனது பந்து வீச்சு மூலம் அதனை இழுத்துப் பிடித்து வெற்றிப் பாதைக்கு மாற்றுவதில் கை தேர்ந்தவர். அதற்கு எடுத்துக்காட்டாக கூறினால் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் கிட்டத்தட்ட தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெரும் சூழ்நிலையில்தான் இருந்தது.
ஆனால் கடைசி ஐந்து ஓவர்களில் இரண்டு ஓவர்கள் மூலம் தனது அபார பந்துவீச்சின் மூலம் தோல்வி பாதையில் இருந்த இந்திய அணியை திரும்பி வெற்றி பாதைக்கு வர வைத்தார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவருமே அடி வாங்கிய நிலையில் இருந்தார். இதனால் பேட்ஸ்மேன்கள் அனைவரும் இவரை பார்த்து தடுமாறி வரும் நிலையில் இலங்கை அணியின் பயிற்சியாளர் இவர் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பும்பரா குறித்து ஜெயசூர்யா கூறும்போது “பும்ரா தற்போது கிரிக்கெட்டின் தலைசிறந்த பந்துவீச்சாளராக திகழ்கிறார். அவருக்கு உரிய மரியாதை கொடுங்கள். அவருடைய நாளாக இருந்தால் எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் தடுமாறித்தான் போவார்கள். இதனால்தான் பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சில் பெரும்பாலும் தடுப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
ஆனால் அவருக்கு மோசமான நாட்கள் என்று கண்டிப்பாக இருக்கும். அந்த நாட்களில் அவரது பந்துவீச்சையும் அடிக்க வேண்டும். அவரைப் போன்ற பந்துவீச்சாளர்கள் பெரும்பாலும் உச்சத்திலேயே இருப்பார்கள். ஏனென்றால் அவரைப் போன்ற பந்துவீச்சாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை புத்திசாலித்தனமாக சிந்திப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:ரியான் பராக் சர்ப்ரைஸ் பந்துவீச்சு.. இறுதியில் கோட்டை விட்ட இலங்கை அணி.. 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் பும்ராவை மிக புத்திசாலித்தனமாக பயன்படுத்தும் நோக்கில் உள்ளது. குறிப்பிட்ட தொடர்களில் ஓய்வு எடுத்து வரும்போது பும்ரா முக்கியமான தொடரில் மட்டும் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி இந்தியாவுக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்கள் இருப்பதால் இந்த இரண்டு தொடர்களிலும் கவனம் செலுத்தும் வகையில் பும்ரா இனி அடுத்து வரும் போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கலாம்.

