சஞ்சு சாம்சன் கிட்ட எப்படி இத பண்ணலாம்.. தென் ஆப்பிரிக்க வீரரை சுளுக்கு எடுத்த இந்திய கேப்டன் சூரியகுமார்.. உண்மையில் நடந்து என்ன.?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான நான்கு நாள் கொண்ட டி20I போட்டியானது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் முதல் நாள் போட்டி டர்பனில் நேற்று நடைபெற்றது. தொடரில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியானது முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20I போட்டியில் அபார வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

- Advertisement -

அணிகளுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டது:

இந்திய அணியில், சஞ்சு சாம்சங் அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் 107 ரன்களை குவித்தார். இது சஞ்சு சாம்சனின் இரண்டாவது தொடர்ச்சியான சதமாகும்.

- Advertisement -

இதன் மூலம், 29 வயதான இவர், டி20I-யில் அடுத்தடுத்து சதங்களை பதிவு செய்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

சஞ்சு சாம்சனுக்கு பிறகு, திலக் வர்மா 18 பந்துகளில் 33 ரன்களும், கேப்டன் சூர்ய குமார் யாதவ் 17 பந்துகளில் 21 ரன்களும் குவித்து, 20 ஓவர் ஆட்டம் முடிவில் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்திருந்தனர்.

- Advertisement -

203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய வந்தது தென் ஆப்பிரிக்கா அணி. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், தென் ஆப்பிரிக்க அணியானது 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் குவித்தது.

இந்தப் போட்டியின் (15.3) ஆம் ஓவரின் நடுவே சாம்சன் மற்றும் மார்க்கோ ஜான்சன் ஆகியோர் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.

ரவி பிஸ்னோய் வீசிய பந்தை தட்டி விட்டு ஒரு ரன்னுக்காக ஓடிய போது, விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் ஆடுகளத்தின் நடுவே வந்து பந்தை பிடிக்க முயன்றார். இதனை கவனித்த மார்க்கோ ஜான்சன், சஞ்சு சாம்சனை பந்தை பிடிக்க விடாமல் இடையூறு செய்தார். பின்னர் சஞ்சு சாம்சனை நோக்கி ஜான்சன் ஏதோ முறுமுறுத்தார். இதனால் கோபமடைந்த சஞ்சு சாம்சன், தென்னாப்பிரிக்கா வீரரான ஜான்சன் மற்றும் கோட்சேவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனை கவனித்த இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ், மார்கோ ஜான்சன் மற்றும் கோட்ஸி இருவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக கள நடுவர்கள் இதில் தலையிட்டு இரு அணி வீரர்களையும் சமாதானப்படுத்தினார்கள்.

சஞ்சு சாம்சனை நினைத்து பெருமைப்படுகிறேன்:

போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ், “கடந்த 3-4 தொடர்களில் எங்களது கிரிக்கெட்டின் முறை மாறவில்லை, இந்த வெற்றியில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சஞ்சு சாம்சன் கடந்த 10 ஆண்டுகளில் செய்த கடின உழைப்பின் பயனை அவர் இப்போது அனுபவித்து வருகிறார்”

“சஞ்சு சாம்சன் 90 ரன்களில் இருந்த போதும், அவர் தன் அணிக்காக பவுண்டரி அடிப்பதே எண்ணிக்கொண்டிருந்தார். இந்த செயலானது அவருடைய அணி வெற்றி பெற வேண்டும் என்ற அவரது எண்ணத்தை காட்டுகிறது. அதுவே நாங்கள் எதிர்பார்ப்பது.” என்று கூறி முடித்தார்.

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாம் நாள் போட்டியானது க்கெபர்ஹாவில் நாளை நடைபெற உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles