தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையே நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இத்தொடரில், இந்திய அணி வெற்றி பெற்றால் டி20 தொடரை கைப்பற்றும். அதே சமயத்தில், தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும். எனவே, நான்காவது மற்றும் கடைசி போட்டிக்கான தொடர் வெற்றியை நிர்ணயிக்கும் போட்டியாகும்.
இதனைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரரான ஹென்ரிச் கிளாசென், “தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டின் தற்போதைய நிலை இதுதான்……” என்று தங்கள் நாட்டின் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கிளாசனின் கருத்து:
புதன்கிழமை போட்டிக்குப் பிறகு கிளாசனிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “தென்னாப்பிரிக்கா அணியில் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர்கள் இப்போது எதுவும் நடத்தப்படுவதில்லை. இந்த தொடரில் கூட வெறும் 4 போட்டிகள் தான் இருக்கிறது. ஆனால், இந்திய அணியானது கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இரண்டு விதமான கிரிக்கெட் வடிவங்கள்(T20 மற்றும் டெஸ்ட் தொடர்) கொண்ட தொடரை விளையாடி வருகிறது, இது அர்த்தமில்லாதது.
வெள்ளிக்கிழமை நாங்கள் வெற்றி பெற்றால், ஞாயிற்றுக்கிழமை அடுத்த போட்டி வைக்க வேண்டும். இரு அணிகளும் 2-2 என்ற புள்ளிகளோடு சமமாக இருக்கும் போது, அடுத்த போட்டியில் நாம் போட்டியிடுவது எவ்வளவு அருமையாக இருக்கும்.”என்று கூறினார்.
இந்திய அணியை பார்த்து படியுங்கள்:
மேலும் அவர், “இது எங்களுக்கு திருப்தியற்றதாக உள்ளது, இந்த நடைமுறையானது எங்கள் அணி வீரர்களுக்கு பொருத்தமாக இல்லை, எங்கள் வீரர்கள் பிற நாடுகளுக்கு எதிராக அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விரும்புகின்றனர். ஆனால், எப்போதும் நாங்கள் இரண்டு அல்லது மூன்று போட்டிகள் மட்டுமே விளையாடுகிறோம், இதை பார்க்கும் போது எனக்கு கவலையாக இருக்கிறது.
நீங்கள் இந்திய அணியை பாருங்கள் அவர்கள் வெள்ளிக்கிழமை இரண்டு வெவ்வேறு சீரிஸ்களை விளையாட உள்ளன.” என்று கூறி முடித்தார்.
தென்னாப்பிரிக்கா 2022/23 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து இரண்டு போட்டிகளுக்கு மேல் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடவில்லை. கடைசியாக அவர்கள் மூன்று டெஸ்ட்களுக்கு மேல் விளையாடியது டிசம்பர் 2019 மற்றும் ஜனவரி 2020.

