டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் கனடா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 213 ரன்கள் குவித்து இருக்கிறது. அடுத்ததாக கனடா அணி இந்த இலக்கை நோக்கி விளையாட தயாராக உள்ளது.
இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் பந்து வீச்சாளரான வெயின் பர்னல் இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவிக்கும் இந்திய வீரர் மற்றும் அதிக விக்கெட் வீழ்த்தும் பந்து வீச்சாளர் என இருவரை தேர்வு செய்திருக்கிறார். அபிஷேக் ஷர்மா மற்றும் பும்ரா என இரண்டு நட்சத்திர வீரர்கள் அணியில் இருந்தாலும் அவர்களை தேர்வு செய்யாமல் வேறு இதுவரை தேர்வு செய்திருக்கிறார்.
இந்த டி20 உலக கோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ் அதிக ரன்கள் குவிப்பவராக இருப்பார் என்று தேர்வு செய்த அவர், அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் வருண் சக்கரவர்த்தி முதலிடம் வகிப்பார் என்று பேசி இருக்கிறார். அதேபோல அரை இறுதிக்கு முதலில் தகுதி பெறும் அணியாக இந்திய அணி இருக்கும் எனவும் அதற்குப் பிறகு தென்னாப்பிரிக்க அணியும் அதற்கடுத்து இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இருக்கும் என்றும் கணித்திருக்கிறார்.

