ராக்கெட் சயின்ஸ் எல்லாம் இல்ல.. நல்லாவே தெரியுது இந்திய அணிக்கு சதாகம தான் நடக்குது.. ஆனா பைனலில் சிக்குவாங்க – தென் ஆப்பிரிக்க வீரர் பேட்டி

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது ஒரு பக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கத்தில் அனைவரது கண்களும் இந்திய அணி ஒரே இடத்தில் சௌகரியமாக விளையாடுவதிலே இருக்கிறது.

- Advertisement -

பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களால் இந்திய கிரிக்கெட் அணி மட்டும் பாகிஸ்தான் நாட்டிற்கு செல்லாமல் துபாயில் ஹைபிரிட் மாடல் முறைப்படி விளையாடி வருகிறது. இதனை அனைவரும் விமர்சித்து வரும் நிலையில், தென்னாப்பிரிக்க வீரர் ரஸ்ஸி வான் டெர் டுசன், இந்திய அணிக்கு நன்மை மட்டும் இல்ல அவர்களுக்கு மன அழுத்தமும் இருக்கும் என கூறியுள்ளார்.

- Advertisement -

பாகிஸ்தான் சொன்னதில் ஒன்றும் தப்பில்லை:

ரஸ்ஸி வான் டெர் டுசன் கூறுகையில்; “கண்டிப்பாக இந்திய அணிக்கு ஹைபிரிட் மாடல் முறை என்பது மிகப்பெரிய நன்மையை அளித்து வருகிறது. பாகிஸ்தான் இதனைப் பற்றி கூறியதை நான் பார்த்தேன், அவர்கள் சொல்வதிலும் ஒன்றும் தப்பில்லை, இந்திய அணிக்கு இந்த முறையானது மிகப்பெரிய பிரயோஜனமாக அமைந்துள்ளது. நீங்கள் ஒரே இடத்தில் இருக்க முடிந்தால், ஒரே ஹோட்டலில் தங்க முடிந்தால், ஒரே பயிற்சி மையத்தில் பயிற்சி செய்ய முடிந்தால், ஒரே மைதானத்தில் விளையாட முடிந்தால், ஒரே பீட்சில் தொடர்ந்து விளையாட முடிந்தால், அது கண்டிப்பாக உங்கள் அணிக்கு நன்மை அளிக்கும் தானே,”

- Advertisement -

அவர்களுக்கு பொறுப்பு அதிகமாக உள்ளது:

மேலும் அவர், “அதுமட்டுமல்லாமல் இதைக் கண்டுபிடிக்க ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். இந்திய அணிக்கு இந்த நன்மையை பயன்படுத்தும் பொறுப்பு அவர்கள் மீது மிக அதிகமாக இருக்கும். ஒரு வகையில் இது அவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை கூட ஏற்படுத்தலாம், ஏனெனில் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளும் அணிக்கு அங்கு செல்லும் போது சூழ்நிலைகள் அவர்களுக்கு புதிதாக இருக்கும், ஆனால் இந்திய அணி அந்த சூழ்நிலைக்கு பழகியிருப்பார்கள். அவர்களுக்கு சரியாக செய்ய வேண்டும் என்பதில் அதிக அழுத்தம் இருக்கும், ஏனெனில் அவர்கள் அந்த அனைத்து தகவல்களையும் கொண்டிருக்கிறார்கள்,” என்று அவர் கூறினார் கூறினார்.

முதல் இரண்டு போட்டிகளில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்தியா ஏற்கனவே போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles