இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இப்போடியானது, வருகின்ற நவம்பர் 8 ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற உள்ளது.
போட்டிக்கு முந்தைய நாள் செய்தியாளர் சந்திப்பின் போது, கேப்டனான ஐடன் மார்க்ரம் “தென்னாப்பிரிக்கா அணி தங்களுடைய விளையாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும், உலகக்கோப்பைத் தோல்விக்கு பழிவாங்குவதில் அல்ல” என்ன பதில் அளித்திருந்தார்.
விளம்பர பேச்சுகள் எல்லாம் நிறுத்துங்கள்:
போட்டிக்கு முந்தைய நாள் செய்தியாளர் சந்திப்பின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு ஐடன் மார்க்ரம் கூறியதாவது, “உலக இறுதிப்போட்டியில் சந்தித்த அதே நாடுகள் தான் இத்தொடரிலும் விளையாடுகின்றன. ஆனால், இரு அணிகளிலும் சில வீரர்கள் மட்டுமே மாறுப்பட்டிருக்கின்றன. இந்தியாவுடன் விளையாடுவது எப்போதும் எங்களுக்கு உற்சாகமான தொடராக அமையும். குறிப்பாக, இந்திய மண்ணில் விளையாடும் போது இன்னும் ஊக்கத்தை அளிக்கும். இந்தத் தொடருக்காக நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம்”
மேலும் அவர், “தென்னாப்பிரிக்கா அணி தங்களுடைய விளையாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தும், உலகக்கோப்பைத் தோல்விக்கு பழிவாங்குவதில் அல்ல. இந்தப் போட்டி பழிவாங்குவதற்கான மறு போட்டியும் அல்ல. இந்தப் பேச்சுக்கள் எல்லாம் விளம்பரப்படுத்தவே பேசப்படுகின்றனர் என்று என்னுடைய கண்களுக்கு தெளிவாகவே தெரிகிறது” என்று கூறினார்.
உலகக் கோப்பை தொடரில் முக்கிய பங்கு வகித்த ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்டர் குயின்டன் டி காக் போன்ற முக்கிய வீரர்கள் பங்கு பெறவில்லை. இந்தியா அணியிலும் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் ஓய்வு காரணமாக விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

