வெஸ்ட் இண்டீசை அடித்து நொறுக்கிய தென் ஆப்பிரிக்கா.. இந்தியாவுக்கு கிடைத்த செம சான்ஸ்.. மெகா வெற்றி

இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபாரமாக செயல்பட்டு 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கிறது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தென் ஆப்பிரிக்க அணி வென்றால் இந்தியா செமி பைனல் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற சூழ்நிலை இருந்தது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க வெற்றி இந்திய அணி மற்றும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக விளையாட முயற்சி செய்து விக்கெட்டுகளை கொத்துக்கொத்தாக இழந்தது. அந்த அணி 83 ரன் எடுப்பதற்குள் ஏழு விக்கட்டுகளை இழந்து மாட்டிக்கொண்டது. இந்த நிலையில் ஜேசன் ஹோல்டர் 31 பந்துகளில் 49 ரன்கள், ரோமரியோ ஷெப்பர்ட் ஆட்டம் இழக்காமல் 37 பந்தில் 52 ரன்கள் எடுத்தார்கள். இவர்கள் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. லுங்கி நெகிடி மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இதற்கடுத்து விளையாட வந்த தென் ஆப்பிரிக்கா அதிரடியில் மிரட்டியது. பவர் பிளேவில் விக்கெட் இழப்பில்லாமல் 69 ரன்கள் எடுத்தது. மேலும் முதல் விக்கெட் பார்ட்னர் சிறப்பாக 8 ஓவருக்கு 95 ரன்கள் குவித்தது. குயிண்டன் டி காக் 24 பந்தில் 47 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து கேப்டன் மார்க்ரம் 46 பந்துகளில் 82 ரன்கள், ரியான் ரிக்கல்டன் 28 பந்துகளில் 45 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்கா அணி 23 பந்துகள் மீதம் வைத்து ஒரு விக்கெட் மட்டும் இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்திய அணிக்கு ரன் ரேட் இனி பிரச்சனை கிடையாது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles