27 ஆண்டு கால சாபம்.. முடிவுக்கு கொண்டு வந்த டெம்பா பவுமா.. சாம்பியனான தென்னாப்பிரிக்கா அணி!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றியை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. 3வது நாள் ஆட்டம் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிக்கு 69 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. இருந்தாலும், தென்னாப்பிரிக்கா அணி பேட்ஸ்மேன்கள் மீண்டும் சோக்காகிவிடுவார்களோ என்ற கேள்வி எழுந்தது.

- Advertisement -

பொறுப்பேற்ற மார்க்ரம்

இதன்பின் பவுமா – மார்க்ரம் கூட்டணி 3வது நாள் ஆட்டத்தை தொடங்கியது. சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த பவுமா 66 ரன்களில் கம்மின்ஸ் பவுலிங்கில் ஆட்டமிழக்க, மொத்த பொறுப்பும் மார்க்ரம் தலை மீது விழுந்தது. இதனை புரிந்து மார்க்ரம் ரன் குவிப்பை விரைவுப்படுத்தினார். இதனால் வெற்றிக்கு தேவையான ரன்கள் 50 ரன்களுக்கு கீழ் வந்தது.

- Advertisement -

இதன்பின் வந்த ஸ்டப்ஸ் 8 ரன்களில் வெளியேற, மார்க்ரம் பவுண்டரிகளை விளாச தொடங்கினார். இறுதியாக வெற்றிக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது, பவுண்டரி அடிக்க முயன்று மார்க்ரம் ஆட்டமிழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய மார்க்ரம் 207 பந்துகளில் 14 பவுண்டரிகள் உட்பட 136 ரன்களை விளாசி தள்ளினார். அவருக்கு ஆஸ்திரேலியா வீரர்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர்.

- Advertisement -

பவுமா சாதனை

கடைசி பெடிங்கம் – வெர்னே இணை ஆட்டத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தது. இதன் மூலமாக 27 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனையை படைத்துள்ளது. கிரேம் ஸ்மித், டி வில்லியர்ஸ், பொல்லாக், டூ பிளசிஸ் உள்ளிட்ட எந்த தென்னாப்பிரிக்கா கேப்டனாலும் வெல்ல முடியாத ஐசிசி கோப்பையை டெம்பா பவுமா வென்று சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா வரலாற்றில் மறக்க முடியாத வெற்றியாக இது அமைந்துள்ளது. வெற்றிக்கு பின் டெம்பா பவுமா லார்ட்ஸ் பால்கனியில் இருந்து எழுந்து கூட நிற்காமல் தலையை குனிந்து நிம்மதி அடைந்த காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அதேபோல் கிரேம் ஸ்மித், டி வில்லியர்ஸ், பீட்டர்சன் உள்ளிட்ட தென்னாப்பிரிக்கா வீரர்கள் உணர்வுப்பூர்வமாக இருந்தனர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles