எங்கள வச்சு செஞ்சிட்டாங்க.. இப்படி ஒரு தோல்வியை எதிர்பார்க்கவே இல்ல.. மோசமா ஆயிடுச்சி – தென் ஆப்பிரிக்க கோச் வருத்தம்

நேற்று டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் நியூசிலாந்து அணியிடம் தென் ஆப்பிரிக்கா அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இந்த தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் மிகவும் வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி 169 ரன்கள் மட்டுமே கிடைத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி வெரும் 13 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றுவிட்டது. அந்த அணிக்கு 33 பந்தில் பின் ஆலன் அதிரடி சதம் அடித்தார்.

- Advertisement -

இதுகுறித்து தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் பேசும் பொழுது ” நேற்று நாங்கள் சோக் ஆகிவிட்டோம் என்று சொல்ல முடியாது. அப்படி சொல்ல வேண்டுமென்றால் போட்டியில் எங்களுக்கு எங்காவது வெற்றி பெறுவதற்கு சிறிய வாய்ப்பாவது இருந்திருக்கிறது. அப்படி எந்த வாய்ப்பையும் நியூசிலாந்து அணி எங்களுக்கு கொடுக்கவில்லை. நாங்கள் அந்த அணியால் முழுமையாக தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம்”

- Advertisement -

“நியூசிலாந்து பந்து வீச்சு அருமையான முறையில் செயல்பட்டு ஆரம்பத்திலேயே எங்களுக்கு அழுத்தத்தை உருவாக்கி வேகத்தை குறைத்து விட்டது. நாங்கள் விக்கெட்டுகளை துவக்கத்தில் இழந்ததால் எங்களுக்கு மொமண்டம் கிடைக்கவில்லை. ஆனால் இந்த தோல்விக்கு நான் இன்று உட்கார்ந்து எந்த காரணத்தையும் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் எங்களை சிறப்பாக விளையாடி கடுமையாக தோற்கடித்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles