34 ரன்கள்.. லாராவின் 400 ரன்கள் சாதனையோட மதிப்பு என்னனு தெரியுமா தம்பி.. தென்னாப்பிரிக்கா கேப்டன் முல்டரை கேட்கும் ரசிகர்கள்

2004ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவானான பிரையன் லாரா 582 பந்துகளில் 4 சிக்ஸ், 43 பவுண்டரி உட்பட 400 ரன்களை விளாசி தள்ளினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனி நபர் அடித்த அதிகபட்ச ஸ்கோராக 400 ரன்கள் அமைந்தது. இந்த சாதனையை 21 ஆண்டுகளாக யாராலும் முறியடிக்க முடியவில்லை.

- Advertisement -

லாராவின் சாதனை

இதற்கு முன்பாக லாரா 376 ரன்கள் சேர்த்து சாதனை படைத்த போது, மேத்யூ ஹெய்டன் 380 ரன்கள் சேர்த்து சாதித்தார். ஆனால் அந்த சாதனையை லாரா மீண்டும் முறியடித்து 400 ரன்களை குவித்தார். இதன்பின் எந்தவொரு வீரராலும் 350 ரன்களுக்கு அருகில் கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் குவிக்க முடியவில்லை. இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.

- Advertisement -

இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி 114 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 626 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் முல்டர் 334 பந்துகளில் 4 சிக்ஸ், 49 பவுண்டரிகள் உட்பட 367 ரன்களுடன் களத்தில் இருந்தார். அந்த நேரத்தில் திடீரென தென்னாப்பிரிக்கா அணி டிக்ளேட் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

தவறவிட்ட முல்டர்

லாராவின் 400 ரன்கள் சாதனையை முறியடிக்க வெறும் 33 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. இத்தனை ஆட்டம் 2வது நாளின் 2வது செஷனில் மட்டுமே இருந்தது. ஜிம்பாப்வே அணியை வீழ்த்த வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், 34 ரன்களை அடிக்க கொஞ்சம் அவகாசம் கொடுத்திருக்கலாம். ஏனென்றால் மீண்டும் இப்படியொரு வாய்ப்பு கிடைக்குமா என்பது மிகப்பெரிய கேள்வி.

இதன்பின் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் வெறும் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் ஃபாலொஒ ஆன் கொடுத்த தென்னாப்பிரிக்கா அணியால், மீண்டும் ஜிம்பாப்வே களம் புகுந்தது. அப்போது 2வது நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் மட்டுமே சேர்த்தது. மொத்தமாக ஜிம்பாப்வே அணி 59 ஓவர்கள் ஆடி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் முல்டர் மீது என்ன கோபம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles