இதுவே கடைசி வாய்ப்பு.. 2024 டி20 உலக கோப்பையோடு ஓய்வு பெற வாய்ப்புள்ள ஆறு நட்சத்திர வீரர்கள்

இன்னும் சில தினங்களில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் சில பெரிய நட்சத்திர வீரர்களுக்கு இது கடைசி உலக கோப்பையாக அமையலாம். அந்த ஆறு நட்சத்திர வீரர்கள் குறித்து காண்போம்.

- Advertisement -

1.ரோஹித் சர்மா

- Advertisement -

தற்போது இந்திய அணியின் டி20 கேப்டனாக வழிநடத்த உள்ள ரோகித் சர்மா அவருக்கு 35 வயது ஆவதால் இதுவே அவருக்குகடைசி உலக கோப்பையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 150 சர்வதேச போட்டியில் விளையாடி 3974 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் ஐந்து சதங்களும் 29 அரை சதங்களும் அடித்திருக்கிறார். அவர் டி20 உலக கோப்பையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

2.டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த இடது கை தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் அவருக்கும் இதுவே கடைசி உலக கோப்பையாக இருக்கும் என்று முன்னரே அறிவித்திருந்தார். 103 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 3099 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம் மற்றும் 26 அரை சதங்கள் அடங்கும்.

- Advertisement -

3.கேன் வில்லியம்சன்

நியூசிலாந்தைச் சேர்ந்த கேன் வில்லியம்சன் இதுவரை 89 சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய 2,547 ரன்கள் குவித்து இருக்கிறார். இவர் இந்த டி20 ஃபார்மெட்டில் சதம் அடிக்கவில்லை என்றாலும், 18 அரை சதங்கள் அடித்து இருக்கிறார். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 125 ஆகும். இவரின் வயது குறைவாக இருந்தாலும் நவீன டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ப இனிவரும் அடுத்த தொடர்களில் இவர் விளையாடுவது கடினம்.

4.ஆண்ட்ரே ரசல்

வெஸ்ட் இண்டீசை சேர்ந்த இவர், உலகில் நடைபெறும் அனைத்து டி20 கிரிக்கெட் லீக்கிலும் முக்கிய வீரராக திகழ்கிறார். 2024ஆம் ஆண்டில் தனது சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையே இவருக்கு கடைசியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 75 சர்வேச டி20 போட்டிகளில் விளையாடி 955 ரன்கள், 45 விக்கெட்களையும் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

5.ட்ரெண்ட் போல்ட்

நியூசிலாந்து அணியைச் சேர்ந்த நட்சத்திர வீகப்பந்துவீச்சாளரான டிரண்ட் போல்ட். இவருக்கும் இதுவே கடைசி உலக கோப்பையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வேகப்பந்து வீச்சாளரான இவர் அடுத்த உலக கோப்பையில் விளையாடும் போது 35 வயதை கடந்திருக்கும் என்பதால் இவர் விளையாடுவதும் கடினம். மேலும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று உலகம் முழுவதும் நடைபெற இருக்கும் டி20 லீக்குகளில் விளையாட மட்டுமே விரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விராட் கோலியும் என்னைப் போல்தான்.. அதனால் மசாலா போட வேண்டிய தேவையில்லை.. கௌதம் கம்பீர் பேட்டி

6.விராட் கோலி

தற்போது 35 வயதாகும் விராட் கோலி நினைத்தால் இன்னும் இரண்டு டி20 உலகக்கோப்பை கூட விளையாடலாம். ஏனெனில் இவரது உடல் தகுதி அபாரமாக இருக்கிறது. ஆனால் அது நடக்க வாய்ப்பில்லை ஏனெனில் இந்த உலகக் கோப்பைக்கே அவரது பெயரை சேர்க்க பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 117 டி20 போட்டிகள் விளையாடி 4037 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles