தப்பிச்சிங்க.. அவரு மட்டும் இருந்திருந்தா இந்திய அணி தோத்திருக்கும்.. ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் அதிரடி பேட்டி.!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணியின் தோல்விக்கான காரணங்களை சைமன் காடிச் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பைத் தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலியா அணி எதிர்கொண்ட முதல் டி20 தொடர் இதுவாகும்.

- Advertisement -

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையியான 4வது டி20 தொடர் ராய்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நல்ல அடித்தளம் அமைத்தது.

- Advertisement -

பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, பின்னர் ஜோடி சேர்ந்த ரிங்குசிங், ஜிதேஷ் சர்மா ஜோடி இந்திய அணி நல்ல ஸ்கோர் எட்ட உதவியது. இதில் அதிக பட்சமாக ரிங்கு சிங் 46 ரன்களைக் குவித்தார்.

- Advertisement -

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 174 ரன்களைக் குவித்தது. பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட் தவிர மற்றவர்களின் பங்களிப்பு உதவி செய்யாததால் 154 ரன்களை மட்டுமே குவித்தது.

அதிகபட்சமாக வேட் 36 ரன்களைக் குவித்தார். இதனால் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. தோல்வி குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் சைமன் காடிச் கருத்துத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில்,
“ஆஸ்திரேலியா நான்காவது டி20ஐ 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்பதற்கு மேக்ஸ்வெல் இல்லாது தான் காரணம். இந்த போட்டி மட்டுமல்ல, தொடர் முழுவதும் ஆஸ்திரேலியா அணியால் சுழலை சரியாகக் கையாள முடியவில்லை. அவர்கள் நேராக விளையாடாமல் கிராஸ் பேட் செய்யப்பட்ட ஷாட்களை அதிகமாக விளையாடினர்”.

“சுழலுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி தடுமாறுகிறது. இன்னும் சற்று வித்தியாசமாக விளையாடி இருக்கலாம். மேலும் மேக்ஸ் வெல் இல்லாததும் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ” என்றும் தெரிவித்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles