ஹாட்ரிக் சதம்.. கேப்டன் சுப்மன் கில்லின் ருத்ர தாண்டவம்.. நங்கீரம் மாதிரி நின்னுட்டாரு.. மாஸ் சம்பவம்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா, சாய் சுதர்சன் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

- Advertisement -

இதன்பின் இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் – ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் கேஎல் ராகுல் 2 ரன்களில் ஆட்டமிழக்க, ஜெய்ஸ்வால் – கருண் நாயர் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 2வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், கருண் நாயர் 31 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் கூட்டணி இணைந்தது.

- Advertisement -

சுப்மன் கில் பொறுப்பு

அதன்பின் ஜெய்ஸ்வால் அதிரடியாக ரன்களை விளாசிய நிலையில், இங்கிலாந்து பவுலர்கள் திணறினர். சுப்மன் கில் இன்னொரு பக்கம் நங்கீரம் இட்டு நிதானமாக விளையாடினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, ஜெய்ஸ்வால் 87 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் வந்த ரிஷப் பண்ட் 25 ரன்களில் வெளியேற, மொத்தமாக சுப்மன் கில் பொறுப்பேற்று கொண்டார்.

- Advertisement -

அப்போது ஜடேஜாவை ஒரு பக்கம் நிற்க வைத்து, சுப்மன் கில் பவுண்டரியாக விளாசி தள்ளினார். விரைவாக அரைசதம் கடந்த அவர், வேகமாக சதத்தை நோக்கி முன்னேறினார். ஒரு கட்டத்தில் 90 ரன்களுக்கு மேல் விளாசிய அவர், 94 ரன்களில் இருந்து போது டவுன் தி டிராக் இறங்கி வந்து சிக்ஸ் அடிக்க முயற்சித்தார். அது கைகூடாத சூழலில், அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி சதத்தை எட்டினார்.

சுப்மன் கில் சாதனை

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் அடிக்கும் 7வது சதம் இதுவாகும். அதேபோல் கேப்டனான பின் தொடர்ச்சியாக 2 சதங்களை விளாசிய 4வது வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பாக விராட் கோலி, விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர் ஆகியோர் கேப்டனான முதல் 2 போட்டிகளிலும் சதம் அடித்துள்ளனர். அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிராக சுப்மன் கில் அடிக்கும் ஹாட்ரிக் சதம் இதுவாகும். 

- Advertisement -

ஏற்கனவே கடந்த ஆண்டு இந்திய மண்ணில் நடந்த ஆட்டத்தில் சுப்மன் கில் சதம் விளாசி இருந்தார். தற்போது இங்கிலாந்து மண்ணில் தொடர்ந்து 2 சதம் அடித்துள்ளதன் மூலமாக புதிய பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பாக அசாருதீன், திலீப் வெங்சர்கார், ராகுல் டிராவிட் ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் சதம் அடித்துள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles