உண்மைய சொல்றேன்.. இந்த பையனுக்கு மட்டு வாய்ப்பு கொடுத்தான் பெரிய ஆளா வந்துடுவாரு.. அதான் சீனியர லேட்டா கொண்டு வந்தேன் – கில் பேட்டி

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் அணி பஞ்சாப் அணியிடம் பரபரப்பான போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் எதனால் தோற்றோம் என கேப்டன் சுப்மன் கில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் பேசும்போது “நாங்கள் நல்ல முறையில் பந்து வீசி இருக்கிறோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு கடைசியில் பேட்டிங் செய்யவில்லை. இந்த ஆடுகளம் 200 ரன்கள் அடிக்கக்கூடியது இல்லை ஆனால் 175 ரன்கள் எடுத்திருந்தால் கதையே மாறி இருக்கும்”

- Advertisement -

“பிரசித் கிருஷ்ணாவை சீக்கிரத்தில் பந்து வீச கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவரை தாமதமாக கொண்டு வந்ததால் நாங்கள் போட்டியில் கடைசி வரை இருந்தோம். கிரிக்கெட்டை பொருத்தவரை நடந்து முடிந்த பிறகு ஏதாவது அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் என்று சொல்வது வழக்கம்”

- Advertisement -

“அசோக் சர்மாவை ஒரு கேம்பில் பார்த்தேன். அவரது வேகப் பந்து வீச்சால் நான் ஈர்க்கப்பட்டேன். இந்த போட்டியின் ஆரம்பத்திலும் முடிவிலும் அவர் அருமையாக பந்து வீசினார். அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தால் பெரிய வீரராக வருவார்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles