ரோஹித் சர்மா கிட்ட எப்போதுமே இதை எதிர்பார்க்காதீங்க.. அவர் நினைச்சாலும் அது நடக்காது – இந்தியா கேப்டன் கில் பேட்டி

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 41 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இதன் மூலமாக நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த தொடரில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் விரைவாக வெளியேற, அதற்குப் பிறகு விராட் கோலி நிலைத்து நின்று விளையாடினாலும் பின்னால் வந்த பேட்ஸ்மேன்கள் விரைவாக வெளியேறியதால் இந்திய அணி 41 வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ரோஹித் சர்மா குறித்து சுப்மான் கில் பேசும் போது “ரோஹித் சர்மாவின் தொடக்க இடம் குறித்து கேட்கிறீர்கள். அவர் ஆஸ்திரேலியா தொடர் தொடங்கி தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் தொடர் வரை சிறந்த பேட்டிங்கில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவருக்கு இந்தத் தொடரில் சிறப்பான தொடக்கம் கிடைத்தது இருப்பினும் அவரால் அதை பெரியார் ரன்னாக மாற்ற முடியவில்லை. சிறந்த தொடக்கம் கிடைத்தாலும் எல்லா நேரங்களிலும் அதனை பெரிய ஸ்கோராக எப்போதும் மாற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் எப்போதுமே ஒரு சிறந்த வீரர்” என்று ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles