கேப்டனான முதல் போட்டி.. விமர்சனங்களுக்கு பேட்டால் பதிலடி கொடுத்த சுப்மன் கில்.. வெளிநாட்டில் முதல் சதம்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் – ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

- Advertisement -

விமர்சனங்கள்

இதில் கேஎல் ராகுல் 42 ரன்களிலும், பின் வந்த சாய் சுதர்சன் டக் அவுட்டாகியும் வெளியேறினார். இதன்பின் 2வது செஷனை ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் கூட்டணி இணைந்து தொடங்கியது. இதில் கேப்டனாக சுப்மன் கில் முதல் போட்டியில் களமிறங்கி இருப்பதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல் நம்பர் 4 பேட்டிங் வரிசையிலும் முதல்முறையாக களமிறங்குகிறார்.

- Advertisement -

வெளிநாடுகளில் சுப்மன் கில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்காத நிலையில், சுப்மன் கில் மீது அதிக அழுத்தம் இருந்தது. இந்த நிலையில் தொடக்கம் முதலே அதிரடியாக பவுண்டரிகளை விளாசிய சுப்மன் கில், விரைவாக அரைசதம் கடந்தார். 2வது செஷனில் ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்த, சுப்மன் கில்லின் அதிரடி அடுத்த கட்டத்திற்கு சென்றது.

- Advertisement -

சுப்மன் கில் சாதனை

இதன்பின் ஜெய்ஸ்வால் வெளியேற, பொறுப்பை சுப்மன் கில் எடுத்து கொண்டார். இங்கிலாந்து அணியின் சொயப் பஷீர் அட்டாக்கிங் லெந்தில் வீச, ரிஷப் பண்ட் தடுமாறினார். ஆனால் சுப்மன் கில் கொஞ்சம் அழுத்தம் இல்லாமல் விளாசி தள்ளினார். சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 140 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலமாக கேப்டனான முதல் இன்னிங்ஸிலேயே சதம் விளாசிய 4வது கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில்லின் 5 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் SENA நாடுகளில் முதல் சதம் இதுவாகும். இவருக்கு கேப்டன்சி கொடுத்த போது பல்வேறு கேள்விகள் இருந்த போதும், முதல் போட்டியிலேயே சுப்மன் கில் விமர்சனங்களை தவிடு பொடியாக்கி இருக்கிறார். கேப்டனான முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, கவாஸ்கர், விஜய் ஹசாரே ஆகியோருடன் சுப்மன் கில் இணைந்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles