இன்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஆறு போட்டிகளை பஞ்சாப் அணி தோற்று உள்ளது. அதே சமயத்தில் முதல் ஆறு போட்டிகளை பஞ்சாப் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது ” பவர் பிளேவை அவர்கள் மிகச் சிறப்பாக ஆரம்பித்தார்கள். அதனால் தொடர்ந்து அவர்கள் அடித்து விளையாடினார்கள்.நாங்கள் இந்த இடத்திலேயே தோல்வி அடைந்து விட்டோம் எங்களால் மேற்கொண்டு விக்கெட் கைப்பற்ற முடியவில்லை”
“இப்போது நான் அடுத்த போட்டிக்காக மிகவும் பாசிட்டிவாக இருக்கிறேன். நான் தோல்விகளை பார்த்து, கடந்த காலத்தை சிந்தித்து துவண்டு போகின்ற ஆள் கிடையாது. அடுத்த போட்டிக்காக நான் இரவும் நம்பிக்கை உடன் இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

