இந்திய ஒருநாள் அணியின் நிரந்தர வீரர்களில் ஒருவர் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படுவதில்லை. இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ள ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கூட ஸ்ரேயாஸ் ஐயர் பெயர் இல்லை. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய விமர்சனத்தை பெற்றது.
இந்திய ஏ அணி
இதனிடையே இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்த பின், அந்த இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் பிசிசிஐ நிர்வாகிகள் நேரடியாக, 3 வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஒரே கேப்டனை கொண்டு வரவே முயற்சித்து வருவதாக தெரிவித்தனர். இதற்கேற்ப சுப்மன் கில் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினர்.
இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் ஆதரவாளர்கள் சோகம் அடைந்தனர். இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு புதிய ரோல் கொடுக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணி விளையாட உள்ளது. இந்த 2 போட்டிகளும் லக்னோ மற்றும் கான்பூர் மைதானங்களில் நடக்கவுள்ளது.
கேப்டனாகும் ஸ்ரேயாஸ் ஐயர்?
இதற்கான இந்திய ஏ அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அந்த அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது. துலீப் டிராபியில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி வந்தாலும், அந்த அணிக்கு ஷர்துல் தாக்கூர் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இந்திய ஏ அணியில் துலீப் டிராபியில் சிறப்பாக வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் துலீப் டிராபி அரையிறுதியில் சிறப்பாக ஆடி இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் பட்டிதார், ஜெகதீசன் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் சர்ஃபராஸ் கான், ஷாம்ஸ் முலானி உள்ளிட்டோரையும் இந்திய ஏ அணிக்குள் கொண்டு வர முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

