நேற்றைய போட்டியில் தான் பேட்டிங் செய்ய வரும் பொழுது குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் செய்த ஒரு விஷயம் தனக்கு ஆச்சரியம் அளித்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் கூறியிருக்கிறார்.
இரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற இந்த போட்டி மிகவும் பரபரப்பாக சென்றது. எளிதாக வெற்றி பெற வேண்டிய பஞ்சாப் கிங்ஸ் விக்கெட்டுகளை நடுவில் இழந்து சிக்கி மீண்டது.
இது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது “நான் விரலில் ஏற்பட்ட காயத்திற்கு ஐஸ் வைத்துக் கொண்டிருக்கும் பொழுது வேகமாக விக்கெட் போய் விட்டது. ஆனால் இதெல்லாம் சகஜம். செட் ஆகிவிட்ட கானலி இருந்தார். அவர் போட்டியை முடித்து வைத்து விடுவார் என்று தெரியும்”
“நான் பேட்டிங் செய்ய வந்த பொழுது எனக்கு மிக அருகில் ஷார்ட் லெக்கில் ஒரு ஃபில்டரை குஜராத் கேப்டன் கில் நிற்க வைத்திருந்தார். எனக்கு ஐபிஎல் தொடரில் இப்படி எல்லாம் யாரும் பீல்டிங் செட்டப் செய்ததே கிடையாது என அவரிடம் நான் சொன்னேன். இந்த போட்டியில் வென்றது மகிழ்ச்சி” அளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.

