நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 17 ரன் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 66 ரன்கள் குவித்த சிவம் தூபே கேப்டன் மற்றும் பயிற்சியாளர் சொல்வதைக் கேட்டு அப்படியே செய்து வருகிறேன் என்று பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது ” இந்த மைதானத்தில் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தாலும் நான் மகிழ்ச்சியோடு விளையாடினேன். அழுத்தமான வேலைகளில் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று எனக்கு அனுபவம் கிடைத்துள்ளதால் என்னால் பவுண்டரி மற்றும் சிக்சர்கள் அடிக்க முடிகிறது. டி20 போட்டிகளைப் பொறுத்தவரை பயிற்சியாளர் மற்றும் கேப்டன் என்னிடம் சொல்வது இந்த ஒரே ஒரு விஷயம் மட்டும் தான்.
அதாவது மிடில் ஓவர்களில் நான் களம் இறங்கும் போது எப்போதுமே ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான் அது. அதன்படியே நான் மிடில் ஓவர்களில் களம் இறங்கி விளையாடினாலும் துவக்கத்தில் சில பந்துகளை எடுத்து நிதானமாக விளையாடிவிட்டு அதன் பிறகு அதிரடியாக விளையாடுகிறேன் அது எனக்கு மிகவும் நன்றாக கைகொடுத்து வருகிறது. டி20 போட்டிகளைப் பொறுத்தவரை நிறைய சிக்ஸர்கள் அடிப்பது முக்கியம் அதற்காக பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறேன் என்று அவர் பேசி இருக்கிறார்.

