தோனி கூறிய அந்த வார்த்தை தான்.. என் மாற்றத்தின் துவக்க புள்ளி.. என் செயல்பாட்டுக்கு இதுவே காரணம் – சிவம் தூபே

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்திய அணியின் வெற்றிக்கு சிவம் துபேவின் அதிரடி ஆட்டம் மிக முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

31 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸ் என 66 ரன்கள் குவித்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். வழக்கமாக இந்திய அணி சிக்கலில் இருக்கும் போதெல்லாம் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிதும் வெளிப்படாத ஹீரோவாக மாறி வருகிறார். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிகச்சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்திய பின்னரே இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தான் சென்னை அணிக்கு சென்ற போது எம்எஸ் தோனி கூறிய வார்த்தைகள் குறித்து சில முக்கிய விஷயங்கள் தெரிவித்திருக்கிறார். இது குறித்து துபாய் கூறும் போது “எனக்கு பவுன்சர் பந்துகளை சிக்ஸர் அடித்து விளையாடுவதில் சிரமமாக இருந்தது. அப்போது அதை கவனித்த தோனி, என்னிடம் வந்து ‘பௌன்சர் பந்துகளை சிக்ஸர் தான் அடிக்க வேண்டும் என்று கிடையாது. அதை பவுண்டரி அல்லது சிங்கிள் அடித்து கூட ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யலாம் என்று கூறினார். அங்கிருந்துதான் என் ஆட்டத்தை புரிந்து நான் மெல்ல மெல்ல மெருகேற ஆரம்பித்தேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles