2 விக்கெட் போச்சுன்னு எங்களுக்கு எந்த கவலையும் இல்ல.. ஏன்னா அது இப்படி இருக்கும்னு எங்களுக்கு முன்பே தெரியும் – சிவம் தூபே கருத்து

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது t20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 208 ரன்கள் என்ற பெரிய இலக்கை வெற்றி பெற்றது. இதில் இஷான் கிஷன் 76 ரன்கள் மற்றும் கேப்டன் சூரியகுமார் யாதவ் 82 ரன்கள் என எடுத்தனர். மேலும் ஆல் ரவுண்டர் சிவம் துபே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி கட்டத்தில் 18 பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் 36 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இது குறித்து சிவம் துபே கூறும்போது ” இஷான் மற்றும் சூர்யா பேட்டிங் மிகவும் அருமையானதாக இருந்தது. எங்களுடைய டாப் 6 ஆறு பேட்ஸ்மேன்களிடமிருந்து நாங்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறோம். கடந்த போட்டியில் அபிஷேக் ஷர்மா இதை செய்து கொடுத்தார். இன்றைய போட்டியில் இஷான் கிஷன் ஆட்டத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார். எங்களுடைய ஆட்ட பாணி என்பது இப்படித்தான் இருக்கும்.

- Advertisement -

தொடக்கத்தில் இரண்டு விக்கெட் விழுந்த போது எங்களுக்கு பெரிய கவலையில்லை. எப்படியும் எங்கள் வீரர்களில் யாராவது ஒருவர் இதை வெற்றிகரமாக முடிப்பார்கள் என்று தெரியும். எனவே நாங்கள் ரிலாக்ஸ் ஆகவே இருந்தோம். இந்த ஆடுகளம் குறித்து எங்களுக்கு முன்பே தெரியும் என்பதால் நாங்கள் பெரிய பதட்டத்தை எதிர்கொள்ளவில்லை” என்று சிவம் துபே பேசியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles