அதிக ஓவர்கள் வீசாதது ஏன்? சுப்மன் கில் முடிவில் தலையிட முடியாது.. புலம்பிய ஷர்துல் தாகூர்.. இந்திய அணிக்குள் வெடித்த மோதல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 358 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 2ஆவது நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களை எடுத்து களத்தில் உள்ளது. இதனால் மிகப்பெரிய முன்னிலையை இங்கிலாந்து அணி பெறும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

- Advertisement -

இங்கிலாந்து ஆதிக்கம்

இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், கம்போஜ் மற்றும் ஜடேஜா உள்ளிட்டோருக்கு அதிக ஓவர்கள் கொடுத்த இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், ஷர்துல் தாகூருக்கு மட்டும் 5 ஓவர்களுடன் நிறுத்தி கொண்டார். முதல் டெஸ்ட் ஆட்டத்திலும் ஷர்துல் தாகூருக்கு முதல் இன்னிங்சில் பெரியளவில் ஓவர்கள் அளிக்கப்படவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை பெற்று வருகிறது. 

- Advertisement -

இதுதொடர்பாக ஷர்துல் தாகூர் பேசும் போது, முதல் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை எனக்கு பெரியளவில் பவுலிங் செய்வதற்கு பெரிய இடம் இல்லை என்று கில் கருதினார். கேப்டனின் முடிவுக்கு வீரர்களால் எந்த கருத்தும் சொல்ல முடியாது. இந்த ஆட்டத்தில் 2ஆவது நாளில் அதிக ஓவர்கள் வீசி இருப்பேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை இன்னும் 3 நாட்கள் ஆட்டம் உள்ளது. 

- Advertisement -

ஷர்துல் தாகூர் புலம்பல்

அதில் அதிக ஓவர்கள் வீசுவேன் என்று நம்புகிறேன். பவுலர்கள் ரிதத்தை பிடிப்பது எளிதான விஷயமல்ல. எவ்வளவு அதிகமாக பவுலிங் செய்கிறோமோ, அவ்வளவு வேகமாக ரிதத்தை பிடிக்க முடியும். ஆனால் இங்கு நான் எவ்வளவு பவுலிங் செய்வேன் என்று தெரியவில்லை. அதனால் என்னுடைய அனுபவம் மூலமாக சிறப்பாக பவுலிங் செய்வேன். 

2வது காலையில் பிட்சில் நல்ல ஸ்விங் மற்றும் வேகம் இருந்தது. நாங்கள் பவுலிங் செய்யும் போது பிட்சில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. நாங்கள் புதிதாக முயற்சிக்கும் போது ரன்கள் அதிகமாக செல்கிறது. அதனால் பவுலர்களுக்கு கூடுதம் கடினம்தான். ஒரே சேனலில் பவுலிங் செய்ய முடிவு செய்து முயற்சித்த போது, எங்களை திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles