இந்தியாவில் கிரிக்கெட் என்பது கோலாகலமான ஓர் திருவிழா போலத் தான். நம் நாட்டில் பெரிய ரசிகர் பட்டாளதைக் கொண்ட விளையாட்டு இது தான். இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் மிகவும் பிடித்தவர்கள் யார் என்பதை தென்னாபிரிக்கா வீரர் ஷம்சி அண்மையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சவுத் ஆப்ரிக்கா அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்ஸி. சுற்றுப் பயணம், அண்மையில் நடந்த 2023 உலகக் கோப்பை, ஐ.பி.எல் ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் பல்வேறு மைதானங்களில் விளையாடியுள்ளார். அவற்றில் இந்த ஒரு மைதானம் மிகவும் ஸ்பெஷல் மற்றும் தனக்குப் பிடித்தது என்றும் கூறியுள்ளார்.
அவர் குறிப்பிட்டது, சென்னை சேப்பாக்கம் மைதானம் தான். அதற்கான காரணம், ” சென்னை சேப்பாக்கம் பார்வையாளர்கள் மிகவும் அறிவாளிகள். தங்களுக்கு பிடித்த அணியை ஆதரிப்பதைத் தாண்டி யார் நன்றாக விளையாடினாலும் எழுந்து நின்று பாராட்டும் தன்மைக் கொண்டவர்கள். ” என்றார் தப்ரைஸ் ஷம்ஸி.
இவர் கூறிய காரணத்தை இதற்கு முன் பல்வேறு பெரிய நட்சத்திரங்கள் கூறி பாராட்டியுள்ளனர். 1999ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட்டில் சிறப்பாக ஆடிய பாகிஸ்தான் நாட்டை எதிரி நாடு என்று ஒதுக்காமல் எழுந்து நின்று கைத்தட்டி கரகோஷம் எழுப்பினர். மறுபக்கம் பல வருடங்கள் ஓடி 2023 ஆகியும் கடந்த 2023 இந்தியா – பாகிஸ்தான் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை கடுமையாக கேலி செய்தனர் அகமதாபாத் ரசிகர்கள்.
பின்னர் மீதம் உள்ள உலகக் கோப்பை போட்டிகளை விளையாட சென்னை வந்த பாகிஸ்தான் அணிக்கு தகுந்த மரியாதையை சென்னை பார்வையாளர்கள் வழங்கினர். சென்னை சேப்பாக்கத்தில் சில முறை விளையாடிய அனுபவம் வைத்து தப்ரைஸ் ஷம்ஸி தனக்கும் இது தான் பிடித்த மைதானம் என்றுள்ளார்.
என்னதான் இந்தியாவில் மும்பை வான்கடே, பெங்களூர் சின்னசாமி, கொல்கத்தா ஈடன் கார்டன் என பெரிய பெரிய ஸ்டேடியம் இருந்தாலும் கிரிக்கெட்டுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் மிகப் பெரிய உயரத்தில் உள்ளது.

