யப்பா சாமி போதும்.. பைத்தியக்காரத்தனத்த கூடவா ஒழுங்கா செய்ய முடியல.. இங்கிலாந்தை விமர்சிக்கும் இந்திய முன்னாள் வீரர்..

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய முன்னாள் வீரர் இங்கிலாந்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி மெக்கல்ம் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு பஸ் பால் முறையை கையில் எடுத்தது. அதாவது எந்த சூழ்நிலையிலும் ஆட்டத்தை அதிரடியாக விளையாடி ரன்களைக் குவிப்பது. அந்த முறை இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெறவே, இதுவரை எந்தத் தொடரிலும் தோல்வியை சந்திக்காமல் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருந்தது.

- Advertisement -

இந்த முறையும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பஸ்பால் முறையை விளையாடுவதுடன் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் மூன்று அறிமுக சுழற்பந்துவீச்சாளர்களையும் அறிமுகப்படுத்தியது. சொன்னதைப் போலவே முதல் டெஸ்ட் போட்டியிலும் வென்று காட்டி இந்திய அணியையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

- Advertisement -

இதன் பின்னர் சற்று சுதாரித்துக் கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அதன் பிறகு நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரலாறு படைத்ததுடன், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. அதாவது 112 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முதல் ஆசிய அணி என்ற பெருமையை பெற்றது.

இதனால் 4 டெஸ்ட் போட்டிகளிலுமா தோல்வி அடைவது ஒருமுறை கூட சுதாரித்துக் கொள்ள வழியில்லையா? என்று இங்கிலாந்து அணி வீரர்கள் மட்டுமில்லாமல் இந்திய வீரர்களும் இங்கிலாந்து அணியை விமர்சினம் செய்து வருகின்றனர். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கூறுகையில்

- Advertisement -

“பேஸ் பால் பட்டி குல். பைத்தியக்காரத்தனத்திற்கும் ஒரு முறை என்று இருக்க வேண்டும். இங்கிலாந்து அணிக்கு இது பொருந்தக்கூடிய ஆட்டமாக இல்லை. குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்து அதன் பிறகும் கூட சுதாகரித்துக் கொள்ள வழியே இல்லாத அணி போல் இருந்தது.

இங்கிலாந்து கேப்டனின் மோசமான தோல்வி மேலும் அவர்களது துயரத்தை அதிகப்படுத்தியது. இவர்கள் நிகழ்காலத்தில் வாழாமல் ஒரு மாய உலகில் வாழ்வது போன்றே எனக்கு தோன்றியது. பேஸ் பால் முறை வெற்றி பெற பைத்தியக்காரத்தனத்திற்கு ஒருமுறை இருக்க வேண்டும். இது இங்கிலாந்து அணியிடம் சுத்தமாக இல்லை” என்று கூறி இருக்கிறார். இங்கிலாந்து அணியை பொறுத்த வரை ஜோ ரூட் மட்டுமே தனது பழைய பேட்டிங் ஃபாமை மீட்டெடுத்தது போல் தெரிந்தது. ஒரு சில வீரர்களைத் தவிர மற்ற வீரர்களிடம் வெற்றி பெறுவதற்கான உத்வேகமும், ஊக்கமும் தொடர் முழுவதிலும் தெரியவில்லை.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles