3 பெரிய ஐபிஎல் டீம் சஞ்சு சாம்சனை குறி வெச்சாங்க.. ஆனா என் பையன் சிஎஸ்கே அணிக்கு மட்டுமே விளையாடுவேன் உறுதியா சொன்னாரு – சாம்சன் தந்தை பேட்டி

19 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் இதற்காக அனைத்து அணிகளும் மிகவும் தீவிரமான முறையில் ஆயத்தமாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில் முன்னாள் சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான முறையில் செயல்பட்டு புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. எனவே சிஎஸ்கே பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சனை தங்கள் அனைத்து டிரேடிங் செய்தது.

- Advertisement -

அதேபோல சிஎஸ்கே அணியில் விளையாடிய ஜடேஜா மற்றும் ஷாம் கரண் இருவரையும் ராஜஸ்தான் ராயல்ஸ் தங்கள் அணிக்கு இழுத்தது. மேலும் சஞ்சு சாம்சன் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் கடைசி மூன்று ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி டி20 உலக கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். எனது இந்த முறை சென்னை அணிக்கு அவர் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சாம்சன் குறித்து அவரது தந்தை சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேற முடிவு செய்த போது மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளில் இருந்து தான் அவருக்கு வாய்ப்புகள் வந்தன. அந்த தொடக்க சமயத்தில் சென்னை அணி இந்த ரேசிலேயே கிடையாது. ஆனால் எதிர்பாராத விதமாக சிஎஸ்கே அணி அவரை ஒப்பந்தம் செய்ய முன் வந்த மறுகணமே தான் சிஎஸ்கே அணிக்கு விளையாட விரும்புவதாக மட்டுமே உறுதியாக தெரிவித்து விட்டார்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles