இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் உடன் தனக்கு நீண்ட கால தொடர்பு இருந்து வருவதாக சஞ்சு சாம்சன் கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
கடந்த வருடத்தில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய டி20 அணியில் நிறைய வாய்ப்புகள் கம்பீர் மற்றும் சூரியகுமார் யாதவால் கொடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு நீண்ட காலம் முன்பாகவே கம்பீர் உடன் தனக்கு நட்பு ஏற்பட்டு விட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து சஞ்சு சாம்சன் பேசும் பொழுது ” எனக்கும் கம்பீர் பாய்க்கும் இடையே உறவு நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதாவது நான் அவரை கேகேஆர் அணியிலேயே சந்தித்து விட்டேன். அவர் அப்போது அந்த அணியின் கேப்டனாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது”
“அதே சமயத்தில் அவர் டெல்லி வீரர். தற்போதும் அவர் டெல்லியில்தான் இருந்து வருகிறார். நான் அவர் விளையாடிய டெல்லி அகாடமியில்தான் விளையாடி வந்தேன். எனவே அவருக்கும் எனக்குமான உறவு நீண்ட காலமானது. இது குறித்து சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

