தற்போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் நாளை மறுநாள் இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை செமி பைனலில் விளையாடுவது சந்தேகம் என செய்திகள் தெரிவித்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் சஞ்சு சாம்சன் அரை சதம் அடித்தபோது கூட பெரிதான கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. அவர் மிகவும் அமைதியாக பேட்டை உயர்த்தி காட்டிவிட்டு மீண்டும் கிரிஸில் போய் நின்று விளையாட ஆரம்பித்தார். அவர் கடைசி வரையில் நின்று போட்டியை முடிக்க வேண்டும் என்று நினைத்தது தெரிந்தது.
அதற்குப் பிறகு போட்டியை வெற்றிகரமாக முடித்ததும் ஹெல்மெட்டை கழட்டி கொஞ்ச தூரத்தில் எறிந்துவிட்டு கிறிஸ்தவ முறையில் கடவுளுக்கு நன்றி செலுத்தினார். தற்பொழுது இதுதான் பிரச்சினையாக மாறி உள்ளது.
ஐசிசி விதியின்படி ஹெல்மெட்டை கழட்டி எறிவது குற்றமாக கருதப்படுகிறது. இதற்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படலாம் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படலாம் என்று விதிகள் கூறுகிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் செமி பைனலில் விளையாடுவது இன்னும் உறுதியாகாமல் இருந்து வருகிறது. தற்பொழுது ஐசிசி விதி வினையாக மாறி நிற்கிறது!

