உண்மைய சொல்லிடறேன்.. நான் சதம் அடிக்க நினைச்சேன்.. ஆனா முடிவை மாற்ற காரணம் இதுதான் – சஞ்சு சாம்சன் தகவல்

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து மூன்று சதங்கள் அடிக்க முடியாமல் போனது குறித்து சஞ்சு சாம்சன் சில புதிய தகவல்களை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்த தொடரில் மூன்று சதங்களை அடிப்பதற்கு மிக நெருக்கமான வாய்ப்பில் சஞ்சு சாம்சன் இருந்தார். ஆனால் அணிக்காக அதிரடியாக விளையாட ஈடுபட்டு சதங்களை இழந்தார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசும் போது ” நான் சதம் அடிக்க நினைத்தது உண்மை. யார் அந்த இடத்தில் இருந்தாலும் சதம் அடிக்க யோசிக்காமல் இருக்க மாட்டார்கள். ஆனால் 2024 ஆம் ஆண்டு சூரியகுமார் கம்பீர் சேர்ந்த பிறகு ஒவ்வொரு அணி கூட்டத்திலும் தனிப்பட்ட சாதனைக்காக விளையாட கூடாது என்று பேசப்பட்டது. எங்கள் குணாதிசயம் இப்படித்தான் வளர்க்கப்பட்டது”

- Advertisement -

“இதைத் தாண்டி நான் சதம் அடிக்க நினைத்தபோதும், இதே அணுகுமுறையில் தான் நாம் இந்த ரன்களை எடுத்து இருக்கிறோம், எனவே இப்பொழுது நாம் சதத்திற்காக நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாது என முடிவு செய்தேன். அதனால்தான் சதம் அடிக்கும் முடிவை மாற்றி விட்டேன்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles