சிஎஸ்கேவில் நான் என்னைக்கும் பெரிய ஆளா வரமாட்டேன்.. அங்கு தலைவன் ஒருவனே.. அது தோனி மட்டுமே.. சஞ்சு சாம்சன்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது இன்னும் சில வாரங்களில் துவங்கி நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டை விட இந்த முறை மிகவும் வலுவானதாக களம் இறங்குகிறது. இந்த சூழ்நிலையில் முதன்முதலாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரான சஞ்சு சாம்சன் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களம் இறங்கி விளையாட இருக்கிறார்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனிக்கு மாற்று வீரராக பார்க்கப்படும் இவர், சென்னையில் அதிக அளவு ரசிகர் பட்டாளங்களை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடப்பட்டது. எனவே தோனிக்குப் பிறகு சென்னை அணியின் ரசிகர் பட்டாளத்தை தக்கவைக்க நிர்வாகம் எடுத்துள்ள சாமர்த்தியமான முடிவாகவும் இது கருதப்படுகிறது.

- Advertisement -

இதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறும்போது “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பொருத்தவரை நான் எந்த பெரிய வீரராகவும், ஆளாகவும் மாறப்போவதில்லை. அங்கு ஒரே ஒரு தலைவர் மட்டுமே இருக்கிறார் அது மகேந்திர சிங் தோனி பாய் மட்டுமே. என் மீது மகிபாய் மற்றும் நிர்வாகம் வைத்துள்ள மகத்தான இந்த நம்பிக்கையை சென்னை அணிக்காக களம் இறங்கி பல வெற்றிகளை தேடி தருவதன் மூலமாக திருப்பி செலுத்த விரும்புகிறேன்” என்று அவர் பேசி இருக்கிறார்

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles