இந்திய ரசிகர்கள் அபிஷேக் ஷர்மாவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தால் தங்களுக்கு பொறாமையாக இருந்ததாக சஞ்சு சாம்சன் நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.
இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் இருவருமே சில முக்கியமான விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்கள்.
சஞ்சு சாம்சன் பேசும்பொழுது “ஆரம்பத்தில் எங்கு பார்த்தாலும் மைதானத்தில் அபிஷேக் பெயரை மட்டுமே ரசிகர்கள் சொல்லிக் கத்துவார்கள். அவர்கள் எங்கள் விளையாட்டு எல்லாம் பார்க்கிறார்களா இல்லையா என்று எங்களுக்கு தோன்றும். அது எங்கள் வீரர்களுக்கு பொறாமையாக இருக்கும். அபிஷேக் பாய் இப்போது நீங்கள் சூப்பர் ஸ்டார் சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய அபிஷேக் சர்மா “என்னுடைய இறுதி இலக்கு எல்லா வடிவங்களிலும் இந்திய அணிக்கு விளையாடுவதுதான். ஆனால் இது என் கையில் இல்லை. நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயம் என் கையில் இல்லாததற்கு கவலைப்பட கூடாது என்பது. அதே சமயத்தில் ஒருநாள் அணியில் இடம்பெறுவது என்னுடைய கனவு” என்று கூறியிருக்கிறார்.

