அண்மையில் இந்திய டி20ஐ அணியில் துவக்க வீரராக சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து 2 அதிரடி சதங்கள் விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரின் இந்த அதிரடியான ஆட்டம் பிறகு சஞ்சு சாம்சனின் தந்தை விஸ்வநாத், முன்னாள் இந்திய கேப்டன்கள் தோனி, கோலி, ரோஹித் ஆகியோர் தான் சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கையை இதுவரைக் கெடுத்து வந்ததாக பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
இந்திய அணியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருந்த போதும் சஞ்சு சாம்சன் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாததும் உண்மை தான். சஞ்சு சாம்சன் 2013ல் 18 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக முதலில் ஐ.பி.எலில் அறிமுகமானார். அவரின் பலமான ஆட்டத்தால் 2015இல் இந்திய அணியில் களமிறங்கினார்.
ஆனால் அவரால் சர்வதேச அளவில் பெரிதாக தாக்குப் பிடிக்க முடியாமல் பரிதவித்தார். இடையில் ஐ.பி.எலில் கூட அவர் பெரிதாக சோபிக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாகத் தான் கேப்டனாகப் பொறுப்பேற்றப் பின்னர் அவரின் பேட்டிங்கில் ஓர் முதிர்ச்சி தெரிகிறது. இதனால் மீண்டும் இந்திய அணியில் நுழைந்தார்.
ஆனால் ஏற்கனவே இந்திய அணியில் பல இளம் வீரர்கள் அணியில் நுழைய வரிசையில் நிற்க சாம்சனுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. புதிய கேப்டன் சூரியகுமார் யாதவ் தலைமையேற்றப் பின்னர் சாம்சனை துவக்க வீரராக முன்னேற்றி, என்ன ஆனாலும் தொடர்ந்து அணியில் இருப்பார் என நம்பிக்கை அளித்துள்ளார்.
அதன் பயனாக வங்கதேசம், தென் ஆப்ரிக்கா ஆகிய இரு அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து சதங்கள் விளாசியுள்ளார். அவரின் கேரியரில் இது மிகப் பெரிய திருப்பம். ஆனால் இதற்கு அடுத்த 2 போட்டிகளில் 2 டக் அவுட்டுடன் மீண்டும் சொதப்பிவிட்டார். பல்வேறு வாய்ப்புகளை சாம்சன் வீனக்கியதை எல்லாம் துளியும் நினைத்துப் பார்க்காமல் தன் மகனின் கிரிக்கெட் கரியரை நாசமாக்கியதாக தோனி, கோலி, ரோஹித் ஆகியோரைக் குற்றம் சாட்டியுள்ளார் சாம்சனின் தந்தை விஸ்வநாத்.
அவர் ஆவேசத்துடன் பேசியதாவது, ” என் மகன் சஞ்சு சாம்சனின் 10 வருடக் கிரிக்கெட் வாழ்கையை அழித்தவர்கள் பட்டியலில் மூன்று – நான்கு நபர்கள் உள்ளார்கள். அவர்கள் முன்னாள் கேப்டன்களாக இருந்த தோனி, கோலி, ரோஹித் மற்றும் கோச் டிராவிட். அவர்கள் எந்த அளவுக்கு அழிதார்களோ அந்த அளவுக்கு சாம்சன் மீண்டும் முளைதுள்ளார். ” மேலும் நடப்பு இந்திய டெஸ்ட் அணியில் அதிரடி வீரர் கோட்டாவில் சாம்சன் ஆட வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

