கழட்டி விடப்பட்ட அஸ்வின்.. பின்னணியில் இருக்கும் கேப்டன் சஞ்சு சாம்சன்.. ராகுல் டிராவிட் வெளியிட்ட தகவல்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 இல் இந்தியா வெற்றி பெறுவதில் முக்கிய பங்கு வகித்தவர், இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இதன் பிறகு, ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு தக்கவைப்பு பட்டியலையும் அதன் கடினமான சூழ்நிலைகளையும் பற்றி மனம் திறந்து பேசி உள்ளார். மேலும் அவர், வீரர்களை தக்கவைத்ததில் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு மிக பெரிய பங்கு உள்ளது என்று கூறினார்.

- Advertisement -

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு முன்னதாக ஜோஸ் பட்லர், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஆர் அஷ்வின் போன்ற வீரர்களை அணியில் இருந்து விடுவித்துவிட்டு, சஞ்சு சாம்சன் தலா 18 கோடியும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் தலா 18 கோடியும், ரியான் பராக் தலா 14 கோடியும், துருவ் ஜூரல் தலா 14 கோடியும், ஷிம்ரோன் ஹெட்மியர் தலா 11 கோடியும், சந்தீப் சர்மா தலா 4 கோடியும் கொடுத்து தனது அணியில் தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

முடிவெடுப்பதில் முக்கிய பங்கு வகித்த சஞ்சு சாம்சன்:

ராஜஸ்தான் ராயல்ஸின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் கூறியதாவது, “கேப்டன் சஞ்சு சாம்சன் முடிவெடுப்பதில் பெரும் பங்கு வகித்தார். ஆனால் அவர், பல சிரமங்களையும் எதிர்கொண்டார். ஏனென்றால் ஒரு கேப்டனாக அவர், ஐந்து ஆறு ஆண்டுகள் இந்த வீரர்களுடன் பணியாற்றி பல உறவுகளையும் சம்பாதித்து உள்ளார். எங்களால் தக்கவைக்க முடியாத வீரர்களுக்காக நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம்.” என்று தக்கவைப்பு பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு டிராவிட் கூறினார்.

- Advertisement -

மேலும் அவர் கூறியதாவது, “கேப்டன் சஞ்சு சம்சனுக்கு இந்த தக்கவைப்பு பட்டியலில் சீரான பார்வை மட்டுமே இருந்தது. அவர் அதிலிருந்த நன்மைகளையும் மற்றும் தீமைகளையும் நன்கு ஆராய்ந்து தான் முடிவுகளை எடுத்தார். இதனைக் குறித்து அவர் எங்களிடம் நிறைய பேச்சு வார்த்தையும் நடத்தினார். இந்த விவாதமானது மிகவும் எளிதான விவாதம் இல்லை என்று எங்களுக்குத் தெரியும். ஆனாலும், கடைசியில் நாங்கள் எடுத்த முடிவை குறித்து மிகவும் சந்தோஷமாகவே உள்ளோம்” என்றார்.

ராஜஸ்தான் ராயல்ஸ், கடந்த 4 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டு 2 முறை பிளேஆஃப் செல்லும் வாய்ப்பை பெற்றது. மேலும் பட்லர், அஷ்வின் மற்றும் சாஹல் ஆகிய மூவரும் அணியின் வெற்றிக்காக அரும்பாடு பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஆறு தக்கவைப்புகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், அணியில் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. இம்முடிவுகள், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles