எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டேன்.. என்னுடைய திடீர் முன்னேற்றத்திற்கு இந்த மாற்றங்கள் தான் முக்கிய காரணம் – சஞ்சு சாம்சன் விளக்கம்

தற்போது இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் தொடர்ந்து இரண்டு முக்கிய போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்று இருக்கிறார். மேலும் அவர் தன்னுடைய திடீர் முன்னேற்றத்திற்கு காரணம் என்னவென்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சஞ்சு சாம்சன் பேசும் பொழுது ” நான் நியூசிலாந்து தொடரில் பிளேயிங் லெவனில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் அதிக முயற்சிகளை செய்து விட்டேன். எனவே எனக்கு அப்போது விஷயங்கள் சரியாக செல்லவில்லை. உடனடியாக நான் இந்த தவறை திருத்திக் கொண்டிருக்கிறேன்”

- Advertisement -

“நான் உடனே மீண்டும் அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். இந்த விளையாட்டை மதிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன். இது எனக்கு நல்ல பலன் கொடுக்க ஆரம்பித்தது. குறிப்பாக இந்த வடிவத்தில் பெரிய பேட்ஸ்மேன்களே ரன்கள் எடுக்க முடியாமல் சிரமப்படுவார்கள்”

- Advertisement -

“கடினமான காலகட்டத்தில் நான் நேசித்த என்னை நேசித்த அனைவரும் என்னுடன் இருந்தார்கள் என்று நினைக்கிறேன். மேலும் நான் என் மொபைலை முழுவதுமாக ஆப் செய்து வைத்து விட்டேன். இத்துடன் நான் இப்பொழுது வரையில் கூட சமூக வலைதளங்களில் இல்லை. இதனால் எனக்கு வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாது. மேலும் என்னை தொடர்பு கொள்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்தது. இதன் காரணமாக சரியான திசையில் கவனம் செலுத்த முடிந்தது. இப்போது நான் இருக்கும் நிலைக்கு மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles