சொன்னா கேளுங்க பிசிசிஐ.. கம்பீர இந்த ஒன்ன மட்டும் பண்ணவே விடாதீங்க.. இந்திய அணிக்கு நல்லதுக்கு தான் சொல்றேன் – சஞ்சய் மன்ஞ்ரேக்கர் அறிவுரை

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 எந்த கணக்கில் படுதோல்வி அடைந்ததால், தற்போதைய சூழலில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது கடினமாகியுள்ளது.

- Advertisement -

எனவே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முன்னேற வேண்டும் என்றால், பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வென்றாக வேண்டும் என்று சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில், டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியினர் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். எனவே, ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்லும் முன், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேட்டி அளித்துள்ளார்.

- Advertisement -

நியூசிலாந்து டெஸ்ட் போட்டிக்கு பிறகு முதல் முதலில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேட்டி கொடுத்துள்ளார், கவுதம் கம்பீர். ஆனால், கவுதம் கம்பீர் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கடுமையான சொற்களால் பதில் அளித்துள்ளார்.

இதனை, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர், “கம்பீரை இனி பத்திரிகையாளர் சந்திப்புக்கு அனுப்ப வேண்டாம்” தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

சஞ்சய் மஞ்ச்ரேகர்:

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் கூறியதாவது, “கம்பீரை பத்திரிகை மாநாட்டில் பார்த்தேன். பிபிசிஐ கம்பீரை பத்திரிக்கையாளரின் சந்திப்பு போன்ற பொறுப்புகளிலிருந்து விலக்கி வைத்து விட்டு, இந்திய அணிக்கு பயிற்சி அளிக்கும் வேலையை மட்டும் செய்ய வையுங்கள்.

ஏனென்றால், பத்திரிகையாளர்களிடம் பேசும்போது அவரிடம் தேவையான மரியாதையும் பொறுமையும் கூட இல்லை. இப்படிப்பட்டவருக்கு பத்திரிக்கையாளரின் சந்திப்பு என்ற வேலை தேவையில்லை. எனவே, பிபிசிஐ ரோகித் மற்றும் அகர்காரையும் பத்திரிக்கையாளர்களின் சந்திப்புக்கு அழைத்து வரவேண்டும்” என்று கடும் வார்த்தைகளைக் கொண்டு கம்பீரே தனது X வலைதளத்தில் தாக்கியுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles