விராட் கோலி அவசரப்பட்டு இந்த தப்பு பண்ணிட்டாரு.. அவர் காதலிச்ச விஷயத்தை விட்டு சீக்கிரமா விலகிட்டாரு – சஞ்சய் மஞ்சுரேக்கர்

தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான ஜோ ரூட் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் சமீபத்தில் ஓய்வு பெற்ற விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி டி20 உலக கோப்பை வென்றவுடன் அதிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பெஸ்ட் தொடரிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே விராட் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த சூழ்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சஞ்சய் மஞ்சுரேக்கர் விராட் கோலி அவசரப்பட்டு இந்த முடிவு எடுத்து விட்டார் எனவும் அவர் சிறிது யோசித்திருக்க வேண்டும் என்று அதற்கான காரணத்தை கூறுகிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “தற்போது ஜோ ரூட் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் எனக்கு நினைவு விராட் கோலி மீது செல்கிறது. அவர் அவசரப்பட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அவர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் சொதப்பிய பிறகு அங்கு நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி மீண்டும் தனது திறமையை நிரூபித்து இருந்தால் விஷயம் வேறு மாதிரி சென்றிருக்கும். ஏனென்றால் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டை தான் அதிகமாக காதலித்தார்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles