2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் சீரழிந்து போய் இருக்கும் பாகிஸ்தான் அணி உடன் விளையாடாமல் இருப்பது இந்திய அணிக்கு நல்ல விஷயம்தான் என்றும், அவர்களுடன் விளையாடும் போட்டியில் எந்தவிதமான போட்டி தன்மையும் இல்லை என்றும் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேகர் மிகவும் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும் பொழுது ” தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டால் பாகிஸ்தான் அணி உடன் விளையாடாதது எனக்கு எந்த விதத்திலும் நஷ்டமாகவோ வருத்தமாகவோ இல்லை. இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு உருவாக்கப்படும் அதீத பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்புக்கு தகுந்த வகையில் போட்டி முடிவுகள் அமைவதில்லை. இதற்கான காரணம் என்னவென்றால் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே தரத்தில் இல்லை. 90களில் இருந்த பாகிஸ்தான் அணி தற்போது கிடையாது. எனவே நாம் அவர்களுடன் விளையாடாதது நட்டம் இல்லை”
“மேலும் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சீரழிந்து உள்ளது. நாம் மோதி வெல்ல வேண்டிய அணிகள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்தான். பாகிஸ்தான் இப்பொழுது மிகவும் சிறிய அணி. நாம் அவர்களை வெல்வது எந்த விதத்திலும் நமக்கு பெருமையான விஷயம் கிடையாது. நான் இதை க் ஆசியக் கோப்பை தொடரிலேயே பார்த்தேன். மேலும் முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடிய அளவுக்கு இருக்கும் இந்திய இளம் வீரர்களை பாகிஸ்தான் வீரர்களுடன் ஒப்பிடுவது மிகவும் தவறானது” என்று கூறியிருக்கிறார்.

