அபிஷேக் ஷர்மா வியாழக்கிழமை இரவு.. எங்களுக்கு எதிரா செஞ்சிட கூடாது.. நான் நம்புறேன் – சாம் கரன் பேச்சு

இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது செமி பைனல் போட்டியில் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் எதிர்த்து விளையாட இருக்கின்றன. இந்த நிலையில் இன்று முதல் செமி பைனல் போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட இருக்கின்றன.

- Advertisement -

மேலும் இறுதியாக இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் அதிரடி சதம் அடித்திருந்தார். அந்தத் தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்திய அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகன் விருதும் வென்று இருந்தார். அவர் மீண்டும் அப்படி ஒரு ஆட்டத்தை விளையாடினால் இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து சாம் கரன் பேசும்பொழுது “அபிஷேக் ஷர்மா மீண்டும் அப்படி ஒரு இன்னிங்ஸ் விளையாட மாட்டார் என்று நான் நம்புகிறேன். எங்களுடைய முழு கவனமும் வியாழக்கிழமை இரவு இந்திய அணிக்கு எதிரான போட்டியில்தான் உள்ளது. நாங்கள் இந்த போட்டிக்காக எல்லா வகையிலும் தயாராகி வந்திருக்கிறோம். மீண்டும் சொல்கிறேன் எங்களுடைய கவனம் வியாழக்கிழமை இரவில் உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles