ஜெய்ஸ்வாலுக்கு வைத்த பொறி.. சிக்கிக் கொண்ட சாய் சுதர்சன்.. முதல் இன்னிங்ஸிலேயே டக் அவுட்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லே மைதானத்தில் தொடங்கி இருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி தரப்பில் இளம் வீரர் சாய் சுதர்சன் அறிமுகம் செய்யப்பட்டார். இதன்பின் ஜெய்ஸ்வால் – கேஎல் ராகுல் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

- Advertisement -

ஜெய்ஸ்வாலுக்கு போட்ட திட்டம்

இருவருமே நிதானமாக விளையாடிய நிலையில், பவுண்டரிகள் மூலமாக மட்டுமே ரன்களை குவித்தனர். இதனால் இவர்களின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்தது. அதிலும் கேஎல் ராகுல் கவர் டிரைவ் ஷாட்களை ரசிகர்கள் ஈர்த்தது. இந்த நிலையில் தொடக்கம் முதலே இங்கிலாந்து பவுலர்களின் திட்டம் லெக் சைடில் பந்துவீசி விக்கெட்டை வீழ்த்துவதாக மட்டுமே இருந்தது.

- Advertisement -

அதற்கேற்ப லெக் ஸ்லிப்பை இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நிறுத்தி இருந்தார். இதனால் 4 பந்துகளை அவுட் ஸ்விங்கராக வீசி, 5வது பந்தை லெக் சைட் திசையில் வீசினர். ஆனால் ஜெய்ஸ்வால் எச்சரிக்கையாக விளையாடினார்.  சிறப்பாக விளையாடிய நிலையில், முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்டது.

- Advertisement -

2 விக்கெட்டுகள்

சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 78 பந்துகளில் 8 பவுண்டரிகள் உட்பட 42 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினார். அவர் முதல் பந்திலேயே கொஞ்சம் பதற்றத்துடன் காணப்பட்டார். முதல் ரன்னை எடுக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார். இதனை அறிந்து ஜெய்ஸ்வாலுக்கு தீட்டிய திட்டத்தை பென் ஸ்டோக்ஸ், சாய் சுதர்சனுக்கும் பின்பற்றினார்.

இதனை அறியாத சாய் சுதர்சன், கால் திசையில் போடப்பட்ட பந்தை பின்பக்கமாக தட்டிவிட, அதனை விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் தாவி பிடித்தார். இதனால் சாய் சுதர்சன் முதல் இன்னிங்ஸிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 92 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து உணவு இடைவேளைக்கு சென்றது. இதனால் சாய் சுதர்சனுக்காக வேண்டிய தமிழக ரசிகரக்ள் ஏமாற்றம் அடைந்தனர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles